எங்கள் பங்கில் புனித லூயி திருநாள் 25-08-2011 (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. திருவிழா திருப்பலி F.S.M அருட்சகோதரிகளால் நடத்தப்படும் புனித லூயி மருத்துவமனையில் நடைபெற்றது. அருட்தந்தை பெரியநாயகம் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார். அருட்தந்தை மாசில்லாமணி மறையுரை ஆற்றினார். அருட்தந்தை M. ஆரோக்கியம், அருட்தந்தை வில்லியம் ஜான்சன், அருட்தந்தை விஜய் அமிர்தராஜ், அருட்சகோதரிகள், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பங்கு மக்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர். திருப்பலியில் மருத்துவமனைக்காகவும் நோயாளிகளுக்க்காகவும் சிறப்பாக செபிக்கப்பட்டது.
No comments:
Post a Comment